Tuesday, 17 September 2019

        மழை



மழை என்னும் காதலியின் வருகைக்காக
காத்திருந்த  காதலன் (பூமி )மண்...

காற்று என்ற நண்பனிடம்
தூது அனுப்பியது..

காற்று சிலிர்த்தது மேகம் கருத்தது
காற்றும் மேகமும் காதல் சேதி சொன்னது

மழை காதலி வந்ததும் காதலன் உயிர்த்தெழுந்தான் ...

மண் வாசம் வீசி
மழையை வரவேற்றான்..

மழை வரும் சேதி அறிந்து
குயில்கள் பாட்டு பாடி,
மயில்கள்  ஆட்டம் ஆடி
அவர்களை ஆரவாரம் செய்தன...

மழை மண் மீது படர்ந்து
அது வெள்ளமாய் பூமியை தழுவி
தன் காதலை அச்சாரம் இட்டு சென்றது...

No comments:

Post a Comment